புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (23:04 IST)

ரிலீஸ் ஆனது நயன்தாரா படத்தின் பர்ஸ்ட் சிங்கள் பாடல்!

கோலிவுட் திரையுலகில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக உள்ள நயன்தாரா நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் மட்டும் கடந்த சில ஆண்டுகளாக நடித்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார் . இந்த நிலையில் அவர்  ' ஐரா ' என்னும் தலைப்பு கொண்ட படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் முதல்முறையாக இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக இந்த படத்தில் உள்ள கருப்பு நயன்தாரா கேரக்டர் இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத கேரக்டர் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கள் பாடல் இன்று மாலை 5 மணிக்கு ரிலீஸ் ஆகி உள்ளது. கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையில் உருவாகியுள்ள மேகதூதம் என தொடங்கும் இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. என்னை நீ மறவாதிரு, புயல் காற்றிலும் பிரியாதிரு, போன்ற ஆழமான வரிகளை இந்த பாடலில் பாடலாசிரியர் தாமரை எழுதியுள்ளார்.

இந்த படத்தில் நயன்தாராவுடன் கலையரசன், யோகிபாபு, ஜெயப்ரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  சார்ஜுன் இயக்கியுள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக சுதர்ஷன் ஸ்ரீனிவாசனும் படத்தொகுப்பாளராக கார்த்திக் ஜோகேஷும் உள்ளனர். நயன்தாரா நடித்த அறம் படம் நல்ல வெற்றியை பெற்றது போல் இந்த படமும் வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.