ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 18 செப்டம்பர் 2024 (18:56 IST)

சூர்யா வின் ‘கங்குவா’ ரிலீஸ் தேதி எப்போது? சூப்பர் அறிவிப்பு..!

நடிகர் சூர்யா நடித்த 'கங்குவா' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிந்து, ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்த நிலையில் 'கங்குவா' படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்டுடியோ கிரீன், தனது சமூக வலைதள பக்கத்தில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை சற்றுமுன் வெளியிட்டது. 
 
அதில், "'கங்குவா' படத்தின் ரிலீஸ் தேதி நாளை காலை 11 மணிக்கு அறிவிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது. இதை அறிந்த சூர்யா ரசிகர்கள், நாளை  வெளியாகவுள்ள அறிவிப்புக்காக ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
 
சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் 'கங்குவா'. படக்குழுவினர், இந்த படத்தை போட்டியின்றி தனியாக வெளியிட தீர்மானித்துள்ளனர், இது அதிக திரையரங்குகளில் வெளியிடும் வாய்ப்பை அதிகரிக்கச் செய்யும்.
 
'கங்குவா' படத்தில் சூர்யாவுடன், திஷா பதானி, பாபி தியோல், நட்டி, ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ், ஜி. மாரிமுத்து, தீபா வெங்கட், கே.எஸ். ரவிகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 
இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து, வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவை கவனிக்க, நிஷாத் யூசுப் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். சுமார் 350 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள இப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva