1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (08:41 IST)

வடிவேலு பாலாஜி மரணத்துக்கு நடிகர் வடிவேலு இரங்கல்!

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் வடிவேல் பாலாஜி. இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வசதி இல்லாததால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மருத்துவமனையிலே இறந்துவிட்டார். அவரது மறைவுக்கு அவரின் சக சின்னத்திரை கலைஞர்கள் அஞ்சலியை செலுத்தினர்.

இந்நிலையில் வடிவேலு பாலாஜியின் மரணத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு “எனது குடும்பத்தில் 150 பேர் இருக்கிறார்கள் அவர்கள் அத்தனை பேர் சார்பாகவும் வடிவேல் பாலாஜியின் குடும்பத்துக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.