வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 9 செப்டம்பர் 2020 (10:43 IST)

பாரதிராஜா இயக்கும் படத்தில் வடிவேலு? நீண்ட நாட்களுக்கு பிறகு இணையும் காம்பினேஷன்!

இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கும் வெப் சீரிஸ் ஒன்றில் வடிவேலு நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

வடிவேலு சினிமாவுக்கு அறிமுகமான காலகட்டத்தில் கிழக்கு சீமையிலே, கருத்தம்மா, தமிழ் செல்வன் ஆகிய படங்களில் பாரதிராஜா அவருக்கு வாய்ப்புக் கொடுத்தார். ஆனால் அதன் பிறகு இருவரும் இணைந்து பணிபுரியவில்லை.

இந்நிலையில் இப்போது 20 ஆண்டுகளுக்கும் மேலாக சேராத இந்த காம்போ ஒரு வெப் சீரிஸுக்காக இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.