டி.ஆர் தன்ஷிகாவை அழ வைத்தது பப்ளிசிட்டி ஸ்டண்ட்; ஸ்ரீப்ரியா டுவீட்டுக்கு வந்த பதில் டுவீட்


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 3 அக்டோபர் 2017 (16:07 IST)
விழித்திரு படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பின்போது டி.ஆர். தன்ஷிகாவை அழ வைத்த சம்பவம் ஒரு விளம்பரம் என டுவிட்டரில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

 
விதார்த், தன்ஷிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள விழித்திரு படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய தன்ஷிகா டி.ஆர். பெயரை குறிப்பிட மறந்துவிட்டார். இதனால் டி.ஆர்., தன்ஷிகாவை கடுமையாக விமர்சித்தார். தன்ஷிகா மேடையிலே மன்னிப்பு கேட்டு கண்ணீர் விட்டார். 
 
இந்த சம்பவம் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு விஷால் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இதுகுறித்து நடிகை ஸ்ரீப்ரியா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு பதில் டூவிட் செய்த ஒருவர், அந்த நிகழ்ச்சியின் முடிவில் டி.ஆர். இது விளம்பரத்திற்காக என கூறினார் என பதிவிட்டுள்ளார்.
 
இது விளம்பரத்திற்காக என்றால் இந்த சீப் டிராமாவை நடத்திய படக்குழு வெட்கப்பட வேண்டிய விஷயம் என்று ஸ்ரீப்ரியா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தற்போது இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :