புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : செவ்வாய், 19 ஜூன் 2018 (21:37 IST)

அருள்நிதியின் அடுத்த படம் இதுதான்...

அருள்நிதி நடிக்க இருக்கும் அடுத்த படம் பற்றிய தகவல் கிடைத்துள்ளது.
அருள்நிதி நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’. த்ரில்லர் படமான இதை, மு.மாறன் இயக்கினார். அருள்நிதி ஜோடியாக மஹிமா நம்பியார் நடிக்க, வித்யா பிரதீப், சாயா சிங், சுஜா வருணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.
 
இதைத் தொடர்ந்து, ‘புகழேந்தி எனும் நான்’ படத்தில் நடித்து வருகிறார் அருள்நிதி. கரு.பழனியப்பன் இயக்கும் இந்தப் படத்தில், ஹீரோயினாக பிந்து மாதவி நடிக்கிறார். இந்தப் படத்தின் தலைப்பு, ஷங்கரின் ‘முதல்வன்’ படத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
 
இதைத் தொடர்ந்து பரத் நீலகண்டன் இயக்கத்தில் நடிக்கிறார் அருள்நிதி. அருண் வைத்யநாதனிடன் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பரத் நீலகண்டன், இந்தப்  படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘பட்டினப்பாக்கம்’ படத்தைத் தயாரித்த எஸ்.பி. சினிமாஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.