புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 18 ஜூன் 2018 (21:07 IST)

நாடோடிகள் 2 அடுத்து அப்பா 2- சமுத்திரக்கனி அறிவிப்பு

நாடோடிகள் 2 படத்திற்கு பிறகு சமுத்திரக்கனி அப்பா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
 
சமுத்திரக்கனி நடித்த காலா மற்றும் கோலிசோடா 2 படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து, அவரது நடிப்பில் ஆண்தேவை என்ற படம் ரிலீஸாக தயாராகவுள்ளது.
 
மேலும், இவரது இயக்கத்தில் சசிகுமார் ஹீரோவாக நடிக்கும்  நாடோடிகள் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. இதையடுத்து, சமுத்திரக்கனி என்ன படம் இயக்க போகிறார் என்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது.
 
இந்நிலையில், சமுத்திரக்கனி கடந்த 2016-ஆம் ஆண்டு அவரது இயக்கத்தில் வெளியான அப்பா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவிருப்பதாக அறிவித்துள்ளார்.