'தளபதி 62' பர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

Last Updated: திங்கள், 18 ஜூன் 2018 (21:07 IST)
இளையதளபதி விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் அனைவரும் வெளிநாடு செல்லவுள்ளனர்.
இந்த நிலையில் ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாள் வருவதை அடுத்து அதற்கு முந்தைய நாள் அதாவது ஜூன் 21ஆம் தேதி இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்கை ரிலீஸ் செய்யவுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

வழக்கம்போல் சமூக வலைத்தளங்களில் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிடாமல் ஜூன் 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு சன் டிவியில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய், கீர்த்திசுரேஷ், பழ.கருப்பையா, ராதாரவி உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :