1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 18 செப்டம்பர் 2017 (12:24 IST)

இந்த படம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது: இயக்குநர் ஷங்கர் ட்வீட்

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விஷால் இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மிஷ்கினின் திரைக்கதை, சிறப்பான இசை ஆகியவற்றால் இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

 
இந்நிலையில் ஷங்கர் 2.0 படப்பிடிப்பு முடிந்து அனிமேஷன் வேலைகளில் மிகவும் பிஸியாகவுள்ளார். இப்படம் அடுத்த வருடம்  ஜனவரி 25-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடும் துப்பறிவாளன் படத்தை பார்த்துள்ளார்.

 
படத்தை பார்த்து தனது டுவிட்டர் பக்கத்தில் துப்பறிவாளன் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது என பதிவிட்டுள்ளார் இயக்குநர் ஷங்கர். மேலும் படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.