1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 7 மே 2024 (08:17 IST)

கவின் நடிக்கும் ஸ்டார் படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்!

டாடா படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் கவின் கவனிக்கப்படும் ஒரு நடிகராகியுள்ளார். இப்போது அவர் நான்குக்கும் மேற்பட்ட படங்களில் நடிக்கிறார். இந்நிலையில் ஸ்டார் படத்தை டாடா கவின் நடிப்பில் உருவாக்கி வருகிறார் இயக்குனர் இளன்.

இந்த படத்தை நித்தம் ஒரு வானம் படத்தை தயாரித்த ரைஸ் ஈஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஆண்டு இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த படத்தின் ஷூட்டிங் நீண்ட நாட்களாக நடந்து வந்த நிலையில் சமீபத்தில் நிறைவுற்றது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்தது.

படம் மே 10 ஆம் தேதி ரிலீஸாகும் நிலையில் இப்போது படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்துக்கு அனைவரும் பார்க்கும் யூ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதே போல படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 38 நிமிடம் எனவும் சொல்லப்படுகிறது.