வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: சனி, 27 ஜனவரி 2018 (13:22 IST)

கன்னடத்தில் ரீமேக் ஆகிறது ‘திருட்டுப் பயலே 2’

சுசி கணேசன் இயக்கத்தில் வெளியான ‘திருட்டுப் பயலே 2’ படம், கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.



சுசி கணேசன் இயக்கத்தில் கடந்த வருடம் ரிலீஸான படம் ‘திருட்டுப் பயலே 2’. இந்தப் படத்தில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலா பால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்த இந்தப் படத்தை, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப் படத்தின் முதல் பாகத்தின் மூலம்தான் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் காலடி எடுத்து வைத்தது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஹிட்டான ‘திருட்டுப் பயலே 2’ படத்தின் கன்னட ரீமேக் உரிமை, பெரும் தொகைக்கு விலை போயிருக்கிறது. கன்னடத்தில் முன்னணி நடிகர்கள் நடிக்க இருக்கும் இந்தப் படத்தை, சுசி கணேசனே இயக்குகிறார் என்கிறார்கள்.