வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: சனி, 28 அக்டோபர் 2017 (12:32 IST)

டிசம்பரில் வெளியாகிறது ‘திருட்டுப்பயலே 2’

பாபி சிம்ஹா, அமலா பால் , பிரசன்னா நடித்துள்ள ‘திருட்டுப்பயலே 2’, டிசம்பரில் வெளியாகிறது.





சுசி கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘திருட்டுப்பயலே 2’.  பாபி சிம்ஹா ஹீரோவாகவும், அமலா பால் ஹீரோயினாகவும் நடித்துள்ள இந்தப் படத்தில், நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார் பிரசன்னா. வித்யாசாகர் இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தை, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் முதல் பாகத்தைத் தயாரித்ததன் மூலம்தான் முதன்முதலாக சினிமா தயாரிப்பில் காலடி எடுத்து வைத்தது ஏஜிஎஸ் நிறுவனம். இந்தப் படம், டிசம்பர் முதல் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.