Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

“என்னுடைய படத்தையே வெளிவராமல் தடுத்தனர்” - விஷால் ஆவேசம்

CM| Last Updated: வெள்ளி, 18 மே 2018 (17:02 IST)
‘என்னுடைய படத்தையே வெளிவராமல் தடுத்தனர்’ என ஆவேசமாகப் பேசியுள்ளார் விஷால். 
விஷால் நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸான படம் ‘இரும்புத்திரை’. பி.எஸ்.மித்ரன் இயக்கிய இந்தப் படத்தில், சமந்தா ஹீரோயினாகவும், அர்ஜுன் வில்லனாகவும் நடித்தனர். இந்தப் படத்தின் சக்சஸ் மீட் நேற்று நடைப்பெற்றது.
 
அதில் பேசிய விஷால், “இந்தப் படத்தில் நான் பல காட்சிகளில் மிகவும் உண்மையாக, யதார்த்தமாக நடித்தேன். ஒரு காட்சியில் என்னுடன் பாங்க் ஏஜெண்டாக  நடித்த சக நடிகரை அடித்தே விட்டேன். படத்தில் என்னுடன் நாயகியாக நடித்த சமந்தாவுக்கு நன்றி. கல்யாணமானால் நடிக்கக்கூடாது என்று இருந்த ஒரு விஷயத்தை இன்று அவர் உடைத்துவிட்டார். அது எனக்கு சந்தோஷமாக உள்ளது.
இந்தப் படத்தை வெளியிட நான் மிகவும் போராடினேன். பணத்தின் அருமை அப்போதுதான் எனக்குத் தெரிந்தது. என்னுடைய நண்பன் வெங்கட், காரை விற்று எனக்குப் பணம் கொடுத்தார். இன்னொரு நண்பன் பத்திரத்தை விற்று பணம் கொடுத்தார். ஏன் என்னுடைய படத்தை வெளிவராமல் தடுத்தார்கள் என்று எனக்குத்  தெரியவில்லை. இதுவரை எனக்கு இதுபோல் நடந்தது இல்லை.
தயாரிப்பாளர்  சங்கத் தலைவரான என்னுடைய படத்தையே இவர்கள் வெளிவராமல் தடுக்கிறார்கள் என்றால், யோசிக்க வேண்டிய ஒன்று தான். தயாரிப்பாளர் சங்கத் தலைவரின் படத்தையே தடுத்துவிட்டோம் என்று காட்ட முயற்சி செய்துள்ளார்கள் என்று நினைக்கிறேன். படத்தில் உள்ள ஆதார் கார்டு சம்பந்தப்பட்டக்  காட்சிகளை நீக்கக் கோரி போராடுகிறார்கள். அவர்கள் அனைவரும் தியேட்டர் அருகே போராடாமல், வள்ளுவர் கோட்டம் போன்ற இடங்களில் போராடினால்  யாருக்கும் இடைஞ்சல் வராது.
 
ஆர்யா தான் இதில் வில்லனாக நடிக்க வேண்டியது. அப்போது இருந்த வெர்ஷனே வேறு. இப்போது அர்ஜுன் சார் நடித்துள்ள இந்தக் கதாபாத்திரம் நல்ல  பெயரைப் பெற்றுள்ளது. படம் வெளியாக எனக்கு ஆதரவாக இருந்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுக்கு நன்றி” என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :