மகனுக்காக மறுபடியும் இயக்குநராகும் தம்பி ராமையா


cauveri manickam| Last Modified புதன், 13 செப்டம்பர் 2017 (15:25 IST)
தன்னுடைய மகனை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார் தம்பி ராமையா.

 

 
‘மனுநீதி’, ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’ ஆகிய படங்களை இயக்கியவர் தம்பி ராமையா. அதன்பிறகு முழுநேர நடிகராகிவிட்ட அவர், தன் மகன் உமாபதியை வைத்து ஒரு படத்தை இயக்க முடிவெடுத்துள்ளார்.

உமாபதி ஹீரோவாக அறிமுகமான ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’, சில மாதங்களுக்கு முன்பு ரிலீஸானது. ஆனால், படம் சரியாகப் போகவில்லை. எனவே, தன் மகனுக்கு பிரேக் கொடுக்க தன்னால்தான் முடியும் என்று நம்பிக் கொண்டிருக்கும் தம்பி ராமையா, மறுபடியும் இயக்குநர் நாற்காலியில் உட்கார இருக்கிறார். இந்தப் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனத் தெரிகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :