மகனுக்காக மீண்டும் இயக்குனராகும் தம்பி ராமையா


Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 10 மார்ச் 2017 (16:00 IST)
தமிழில் பிஸியாக நடித்துவரும் தம்பி ராமையா மனுநீதி, இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படங்களை இயக்கியவர். நடிப்பில் பிஸியாக இருப்பதால் படம் இயக்காமலிருந்தவர், தனது மகன் உமாபதியை வைத்து ஒரு படத்தை விரைவில் இயக்க உள்ளார்.

 
 
உமாபதி ஏற்கனவே இன்ப சேகரன் இயக்கத்தில் அதாகப்பட்டது மகாஜனங்களே படத்தில் நடித்துள்ளார். தண்ணி வண்டி, தேவதாஸ் 2016 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். அவருடைய ராசி, எந்தப் படமும் வெளியாகவில்லை. வருகிற 24 -ஆம் தேதி, அதாகப்பட்டது மகாஜனங்களே படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
 
இந்நிலையில் தனது மகனை வைத்து ஒரு படத்தை இயக்க தம்பி ராமையா திட்டமிட்டுள்ளார். ரொமான்டிக் காமெடியாக இந்தப் படம் இருக்கும் என கூறப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :