1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 3 மே 2017 (22:44 IST)

பயம்: அஜித்தின் அழகான விளக்கம்

அஜித் ஒரு நல்ல நடிகர் என்பதைவிட ஒரு நல்ல மனிதர் என்ற விதத்தில்தான் அவரை அனைவருக்கும் பிடிக்கும். அவரது நடிப்பை பிடிக்காதவர்கள் பலர் உண்டு. அவரது நடிப்பை பலர் மோசமாக விமர்சனம் செய்வதும் உண்டு. ஆனால் அவரது குணத்தை, மனிதத்தன்மையை, நல்ல குணத்தை யாரும் குறை கூறியதே இல்லை



 


இந்த நிலையில் அஜித்தின் பயம் குறித்து பிரபல நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் தம்பி ராமையா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

ஒருநாள் அஜித்திடம் நான் பேசிக்கொண்டிருந்தபோது, 'நீங்கள் எதற்கு பயப்படுவீர்கள்' என்று கேட்டேன்'. அதற்கு அவர் ' ஒரு அறையில் கேமிரா உள்ளது. அந்த அறையில் நான் எந்த தப்பும் செய்ய மாட்டேன், இன்னொரு அறையில் கேமிரா இல்லை, அங்கு நான் என்ன தப்பு வேண்டுமானாலும் செய்வேன்' என்று நான் வாழ்வதில்லை. எனக்கு மேலே ஒரு கேமிரா என்னை எப்போதும் பார்த்து கொண்டும் கவனித்து கொண்டும் இருக்கின்றது. அந்த கேமிராவுக்கு பயந்தே நான் வாழ்வேன்' என்று பயம் குறித்து அஜித்தின் விளக்கத்தை தம்பி ராமையா கூறியுள்ளார்.

வாழ்க்கையின் முழு தத்துவத்தை இதைவிட எளிமையாக சிறப்பாக யாராவது கூற முடியுமா? அதுதான் அஜித்