புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 12 அக்டோபர் 2021 (15:59 IST)

இனி பேய் படங்களில் நடிக்கப் போவதில்லை… அனபெல் சேதுபதிதான் காரணமா?

நடிகை டாப்ஸி கடைசியாக நடித்த அனபெல் சேதுபதி திரைப்படம் அட்டர் ப்ளாப் ஆனது.

தெலுங்கு நடிகையான டாப்ஸி “ஆடுகளம்” மூலமாக தமிழில் அறிமுகமானார். பின்னர் பல மொழி படங்களில் நடித்து வந்த அவர் தற்போது இந்தி சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த ஹசீன் தில்ருபா திரைப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து அவர் இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த மாதம் டாப்ஸி நடித்த அனபெல் சேதுபதி திரைப்படம் வெளியாகி மோசமான வரவேற்பைப் பெற்றது. இதுபற்றி பேசியுள்ள டாப்ஸி ‘நான் பேய் படங்களில் நடிக்க கூடாது என்ற முடிவில் இருந்தேன். ஆனால் இயக்குனர்தான் இது பேண்டஸி படம் என சொல்லி நடிக்க சம்மதிக்க வைத்தார். இந்த கதையை பாலிவுட்டில் சொல்லி இருந்தாலும் நான் நடித்திருப்பேன். இது மறக்க முடியாத அனுபவம். ஆனாலும் இனிமேல் பேய் படங்களில் நடிக்க மாட்டேன்’ எனக் கூறியுள்ளார்.