ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 12 அக்டோபர் 2021 (15:47 IST)

அமேசான் நிறுவனர் ஜெப் பெஃகாசை பின்னுக்குத் தள்ளிய எலான் மஸ்க்

உலகப் பணக்காரர்களில்  பல வருடங்களாக முதலிடத்தில் இருந்த பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தவர் ஜெஃப் பெகாசஸ். தற்போது இவரை சொத்து மதிப்பைவிட ஸ்பேஸ்- எக்ஸ் நிறுவன தலைவர் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.

சமீப காலமாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அந்நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 222 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.

தற்போது அமேசான் நிறுவனர் ஜெப் பெகாசின் சொத்து மதிப்பு 190.8 பிலியன் டாலராக உள்ளது. ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன் அமேசான் நிறுவனம் தோற்கும் என ஒரு பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில் கூறியதாகவும் இன்று அமேசான் உலகின் தலைசிறந்த நிறுவனமாக வெற்றியுடன் இயங்கி வருவதாகவும் ஜெப் பெகாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த டுவீட்டிற்கு எலான் மஸ்க் ஒரு வெள்ளி எமோஜியை பதிவிட்டுள்ள்ளார்.