மாநாடை தொடர்ந்து இன்னொரு லூப் கான்செப்ட் தமிழ் படமா? – வெளியானது ஜாங்கோ ட்ரெய்லர்!
தமிழில் மாநாடை தொடர்ந்து மற்றுமொரு லூக் கான்செப்ட் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
தமிழில் சிம்பு நடித்து வெங்கட்பிரபு இயக்கியுள்ள படம் மாநாடு. நடந்த நிகழ்வுகளே மீண்டும் மீண்டும் நடக்கும் டைம் லூப் கான்செப்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் டைம் லூப் கான்செப்டில் மற்றுமொரு படத்தின் ட்ரெய்லரும் வெளியாகியுள்ளது. ஜாங்கோ என்னும் இந்த படத்தை சி.வி.குமார் தயாரித்துள்ள நிலையில் மனோ கார்த்திகேயன் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் சதீஷ் குமார், மிருனாளினி ரவி, அனிதா சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ள நிலையில் தமிழின் முதல் டைம் லூப் படம் இது என கார்டு போட்டுள்ளார்கள். ஆனால் இந்த படத்திற்கு சில ஆண்டுகள் முன்னதாகவே மாநாடு தொடங்கப்பட்டதும் இடையே சில பிரச்சினைகள் நீண்ட காலம் கழித்து தற்போது வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.