செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (15:22 IST)

"சூரையா ஜமால் சேக்" சூர்யாவின் உண்மையான பெயரை காட்டி கொடுத்த கூகுள்!

நடிகர் சூர்யா தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவர். இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து பல ஹிட் படங்களை தொடர்ச்சியாக கொடுத்து வரும் நடிகர் சூர்யா கோலிவுட்டின் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார்.

இந்நிலையில்  "surya original name" என்று கூகுள் சர்ச் செய்து பார்த்தால் "சூரையா ஜமால் சேக்" என்று முஸ்லிம் பெயர் ஒன்றை காட்டுகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மனைவி ஜோதிகா இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்பதால் சூர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டார் என சில தகவல்கள் வெளியாகியது.

ஆனால், இந்த வதந்தியை முற்றிலுமாக மறுத்த நடிகர் சூர்யா, தான் சிங்கம் 3 படப்பிடிப்பின் போது ஆந்திராவில் கடப்பா பகுதிக்கு சென்ற போது  ஏ.ஆர்.ரஹ்மான் அழைத்ததால் அவருடன் தர்காவில் தொழுகை செய்ததாக அன்றே விளக்கம் கொடுத்தார். இந்நிலையில் தற்ப்போது மீண்டும் இந்த முஸ்லீம் பெயர் விவகாரம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், சூர்யாவின் உண்மை பெயர் "சரவணன்" என்பது நம் அனைவருக்கும் தெரியும்