செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (12:53 IST)

சூர்யாவின் டுவிட் மீராமிதுனுக்கு பதிலடியா?

சூர்யாவின் டுவிட் மீராமிதுனுக்கு பதிலடியா?
கடந்த சில நாட்களாகவே நடிகை மீராமிதுன் நெகட்டிவ் பப்ளிசிட்டிக்காக தனது டுவிட்டரில் திரை உலக பிரபலங்கள் குறித்து கடுமையான விமர்சனங்களை செய்து வருகிறார் என்பதும், அவர் நினைத்தது போலவே நெகட்டிவ் பப்ளிசிட்டி கிடைத்தாலும் விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகி உள்ளார் என்பதும் அவர்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்நிலைய்ல் இயக்குனர் இமயம் பாரதிராஜா இது குறித்து நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் மீராமிதுனுக்கு கண்டனமும் விஜய் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் தங்கள் ரசிகர்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் அறிவுரையும் கூறியிருந்தார் 
 
இந்த அறிவுரையை ஏற்றுக்கொண்ட நடிகர் சூர்யா இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்.. என்று பதிவு செய்துள்ளார்.
 
கடந்த 2018ஆம் ஆண்டும் இதேபோன்று ஒரு டுவிட்டை சூர்யா பதிவு செய்திருந்தார் என்பதும், அந்த டுவிட்டில் தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற என்று குறிப்பிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது