50 ஆண்டுகளில் இல்லாத பேய் மழை: சிக்கித் தவிக்கும் கேரளா - 26 பேர் பலி
கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்து வருவதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரமெங்கும் வெள்ள நீர் புகுந்துள்ளது. பல வீடுகளில் வெள்ள நீர் புகுந்தும், பல வீடுகள் வெள்ளத்திலும் அடித்து செல்லப்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது.
குறிப்பாக மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, இடுக்கி மாவட்டங்கள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளதால் உபரி நீர் முழுவதும் திறந்துவிடப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் பெங்களூரிலிருந்து கேரளாவிற்கு விரைந்துள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் சார்பில் 5 கோடியும், கர்நாடக அரசு சார்பில் 10 கோடி ரூபாயும் கேரளாவிற்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. வீடுகளை இழந்து தவிப்போர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.