’அந்தக் குறும்படத்தில் ’ நடித்துள்ள சூர்யா

surya
Last Updated: வெள்ளி, 8 மார்ச் 2019 (19:37 IST)
தமிழக  அரசுடன் கைகோர்த்துள்ள சூர்யா பிளாஸ்டிக் தடை குறும்படத்தில் நடித்துள்ளார். மேலும் இதை 2 டி நிறுவனத்தின் மூலமாக அப்படத்தை இவரே தயாரித்திருக்கிறார்.
இவ்வருடம் ஜனவரி 1 ஆம் தேதி பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்தது. அதன் பின்னர்  பிளாஸ்டிக் பயன்பாடு ஓரள்வுக்குக் குறைந்துள்ளது. ஆனால் முற்றிலும் குறையவில்லை. எனவே பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள் குறித்து குழந்தைகளுக்கு எடுத்துரைப்பது போல் அந்தக் குறும்படம் உள்ளது. 
surya
’மாறலாம் மாற்றலாம்’ என்ற பெயரில் நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனத்தின் யூ-டியூப் பக்கத்தில் இந்தக் குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது. இக்குறும்படத்தை இயக்கியவர் ஹரீஸ் ஆவார்.  ஜி.கே.விக்னேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :