'சிறுத்தை' சிவாவின் அடுத்த படத்தில் சூர்யா?

Last Modified புதன், 6 மார்ச் 2019 (22:11 IST)
அஜித் நடித்த 'வீரம்', 'வேதாளம்' , 'விவேகம்' மற்றும் 'விஸ்வாசம்' ஆகிய நான்கு திரைப்படங்களை இயக்குனர் சிவா இயக்கியிருந்தாலும் இன்னும் அவர் பெயருடன் ஒட்டிக்கொண்டுள்ளது 'சிறுத்தை' படம்தான். கார்த்தி, தமன்னா நடித்த இந்த படம் சூப்பர் ஹிட்டாகியடு
இந்த நிலையில் 'விஸ்வாசம்' மிகப்பெரிய ஹிட்டாகியுள்ளடால் அவர் இயக்கத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். இந்த நிலையில் இயக்குனர் சிவா, தனது அடுத்த படத்தின் ஹீரோவாக சூர்யாவை தேர்வு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

இந்த படமும் 'விஸ்வாசம்' போன்றே குடும்ப செண்டிமெண்ட் கலந்த ஒரு ஆக்சன் படம் என்றும் சிவா கூறிய கதையை கேட்டு சூர்யா குஷியாகிவிட்டதாகவும் 'காப்பான்' திரைப்படம் முடிந்ததும் அனேகமாக இந்த படத்தின் அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
சூர்யா ஏற்கனவே சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் என்பதும் இந்த படம் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் கோரூர் ராமசாமி கோபிநாத் என்ற ஜி.ஆர்.கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு என்பதும் குறிப்பிடத்தக்கதுஇதில் மேலும் படிக்கவும் :