வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 7 மார்ச் 2019 (19:33 IST)

எதிர்மனுதாரராக விஜய், அஜித், சூர்யா - கோர்ட் உத்தரவு

தொடர்ந்து போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை நடத்த கோரி மதுரையைச் சேர்ந்த ஜான்ஸி ராணி என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கு இன்று உயர் நீதிமன்ற நீதிமன்ற நீதிபதிகள்  கிருபாகரன், சுந்தர், அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 
அப்போது அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் கூறியதாவது:
 
தற்போது போலீயோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகின்றது,எதிர்மனுதாரராக யாரையும் சேர்க்க வேண்டாம் என்றார்.
 
இதற்கு எதிர்மனுதாரர் ஜான்ஸி ராணி கூறியதாவது:
 
தற்போது போதிய சொட்டு மருந்து முகாம் நடைபெற போதிய விழிப்புணர்வு எதுவும் நடைபெறவில்லை. போதிய விளம்பரங்களும் இல்லை என்று தெரிவித்தார்.
 
இதனையடுத்து பேசிய நீதிபதிகள் கூறியதாவது:.
 
தமிழகத்தில் நன்கு அறிமுகமாகி இருக்கிற பிரபலங்களைக் கொண்டு போதுமான போலியோ விழிப்புணர்வுகள் நடத்த வேண்டும். அப்படி செய்தால் அது மக்களை எளிதாக சென்றடையும் என்றார். அதன் பின்னர் நடிகர் அஜித் சூர்யா,விஜய், தென்னிந்திய நடிகர் சங்க  செயலர் ஆகியோரை  எதிர்மனுதாரராக சேர்த்து நீதிபதிகள் உத்தரவிட்டதால தகவல் வெளியாகிறது.