ரஜினியின் தர்பார் டீசர்! கொண்டாட்டத்தை ஆரம்பித்த ரசிகர்கள்

Last Updated: புதன், 12 ஜூன் 2019 (13:05 IST)
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் "தர்பார்"  படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்த அப்டேட்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கிரைம் திரில்லர் படமான "தர்பார் " படத்தில் நடிக்கவிருக்கிறார். இது ரஜினியின் கேரியரில் 166வது படமாக உருவாகவிருக்கிறது. அண்மையில்  இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. 
 
ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் இப்படத்தை பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது.  ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு  சந்தோஷ் சிவன் ஒளிப்பதிபதிவு செய்கிறார்.  பேட்ட படத்தில் ரஜினிக்கு ஆடைவடிவமைப்பாளராக பணியாற்றிய நிஹாரிகா பசின்கான் இந்தப் படத்திலும் இடம்பெற்றுள்ளார்.
 
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக மும்பையில் நடந்து வருகிறது. அவ்வப்போது  படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படங்களும் , வீடியோக்களும் வெளியாகி எதிர்பார்ப்பில் காத்திருந்த ரசிகர்களுக்கு அவ்வப்போது சர்ப்ரைஸ் கொடுத்ததும், அதே நேரத்தில் படக்குழுவினருக்கு அதிர்ச்சியளித்தும் வந்தது. 
 
படத்தின் அப்டேட்டாக ஃபஸ்ட் லுக் மட்டும் தான் வந்தது. அதன் பிறகு எந்த ஒரு அப்டேட்டும் இல்லை என ரசிகர்கள் புலம்பி வரும் நிலையில் இப்படத்தின் டீசர் ரஜினியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக டிசம்பர் 12ம் தேதி வரும் என்று வதந்திகள் வர ஆரம்பித்துவிட்டன. இதனை அறிந்த ரசிகர்கள் இப்போதே தர்பார் கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டனர். என்னும் இந்த தகவல் உண்மையா இல்லை படக்குழு வேறு பிளான் வைத்துள்ளார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


இதில் மேலும் படிக்கவும் :