1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By

ஆட்சிக்கவிழ்ப்பு இப்போதைக்கு வேண்டாம்: திமுக அதிர்ச்சி முடிவு

நடைபெற்று முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் இரண்டிலும் வெற்றி பெற்று மத்தியிலும் ஆட்சியில் பங்கு, மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் என்ற நம்பிக்கையுடன் திமுக இருந்தது. இதற்காகத்தான் வைட்டமின் 'ப'வும் அதிகமாக செலவு செய்யப்பட்டது. ஆனால் இரண்டுமே நடக்காதது திமுகவை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
 
என்னதான் இந்த வெற்றி ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என்று திமுகவினர் வெளியே சொல்லிக்கொண்டாலும், உண்மையில் இந்த வெற்றி பாஜகவுக்கு எதிராக கிடைத்த வெற்றி என்றும், இந்த வெற்றி திமுகவால் கிடைத்தது என்று மார்தட்ட முடியாது என்ற உண்மையை திமுக தலைமையே உணர்ந்துள்ளது. எனவே இப்போதைக்கு ஆட்சியை கவிழ்த்து, திமுக ஆட்சி அமைக்க முடியாமல் சிக்கல் என்பதையும், உடனே இன்னொரு தேர்தலை சந்தித்தால் வெற்றி கிடைப்பது சந்தேகம் என்றும், எனவே இன்னும் இரண்டு வருடங்கள் பொறுத்திருக்கலாம் என்றும் திமுக முடிவு செய்ததாக கூறப்படுகிறது
 
இந்த இரண்டு வருடங்களில் அதிமுக ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்து, பல்வேறு போராட்டங்கள் நடத்தி மக்களின் நன்மதிப்பை பெற வேண்டும் என்றும் திமுக தலைமை முடிவு செய்துள்ளதாம். மேலும் வரும் சட்டமன்ற தேர்தலின்போது ரஜினிகாந்த் நிச்சயம் களமிறங்குவார் என்பதும் திமுகவுக்கு ஒரு பெரும் பின்னடைவாக இருக்கும் என்பதும் திமுகவை ஒருபுறம் அச்சுறுத்தி வருகிறது