செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (22:55 IST)

ஸ்பைடர்: தெலுங்கில் இல்லாத தமிழில் மட்டுமே இருக்கும் அந்த ஒரு நிமிடம் எது?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் முதல் நேரடி தமிழ் திரைப்படமான 'ஸ்பைடர்' படத்தில் மது அருந்தும் காட்சியோ, புகை பிடிக்கும் காட்சியோ இல்லாமல் இருந்தும் ஆக்சன் காட்சிகள் காரணமாக இந்த படத்திற்கு 'யூஏ' சான்றிதழ் கிடைத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.



 
 
ஸ்பைடர்' திரைப்படம் 146 நிமிடங்கள் ஓடுகின்றது. அதாவது 2 மணி நேரம் 26 நிமிடங்கள் ஆகும். சுமார் இரண்டரை மணி நேரம் ஓடும் இந்த படம் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்றே கருதப்படுகிறது.
 
இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு 145 நிமிடங்கல் மட்டுமே இருக்க, தமிழ் பதிப்பிற்கு மட்டும் ஒரு நிமிடம் அதிகம் இருப்பதற்கு காரணமும் தெரியவந்துள்ளது. இந்த படத்தை தமிழில் லைகா நிறுவனம் வெளியிடுவதால் அந்த படத்தின் லோகோ ஒரு நிமிடம் படத்தின் ஆரம்பத்தில் ஓடுவதால் அந்த ஒரு நிமிட வித்தியாசம் உள்ளதாக கூறப்படுகிறது.