ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 18 செப்டம்பர் 2017 (15:20 IST)

சும்மா கொடுப்பார்களா 50 லட்சம்; பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி ட்வீட் செய்த ஆர்த்தி

பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சி முடிவடைதற்கு இன்னும் 2 வாரங்கள் மட்டுமே உள்ளது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் போட்டி மிகவும் விறுவிறுப்பாக உள்ளது. நேற்று 85ஆவது நாள் எபிசோடில் நடிகர் வையாபுரி  வெளியேற்றப்பட்டார்.

 
இன்றைய ப்ரொமோவில் பிக்பாஸ் டாஸ்க் கொடுக்கிறார். நடிகர் ஆரவ் உடல் வலியின் காரணமாக புலம்பியது காட்டப்பட்டது. "டைட்டில் ஜெயிச்சா வரும் 50 லட்சத்தையும் உடம்புக்குதான் செலவு செய்யணும் போல இருக்கே" என அவர் கூறினார். மற்ற போட்டியாளர்களும் உடல்வலியால் அவதிப்படுவதும் காட்டப்பட்டது.

 
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி தொடர்ந்து தன்னுடைய கருத்தை பகிர்ந்து வரும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்  ஆர்த்தி, "சும்மா கொடுப்பார்களா 50 லட்சம்? இன்னும் நிறைய திருப்பங்கள் இருக்கு" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.