வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 18 செப்டம்பர் 2017 (11:47 IST)

பிக்பாஸ் வீட்டில் சுஜா வருணிக்கும், சிநேகனுக்கும் இடையே மோதல் - ப்ரொமோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை சண்டை, விளையாட்டு என நடந்தாலும், 100 நாட்கள் நெருங்கும் சமயத்தில் சண்டைகள்  அதிகமானதுபோல் தெரிகிறது. தற்போது புதிதாக வந்த புரொமோவில் சுஜா மற்றும் சிநேகனிடையே சண்டை ஏற்படுகிறது.

 
அதில் சுஜா சத்தம் போட்டு பிக்பாஸ் சிநேகன் ஒழுங்கா விளையாடவில்லை என்று குறை கூறுகிறார். மேலும் என்னை  தொடாதீர்கள் என்று கூறுகிறார். அதற்கு சிநேகன் தொடாமல் எப்படி விளையாடுவது என்று ஆரவ் மற்றும் பிந்து மாதவியிடம் கூறுகிறார். மேலும் கூறுகையில், விளையாடுவது ஒன்றும் பிரச்சனை இல்லை மைண்ட் எரிச்சல் அடைகிறது என்றும், விளையாடும்போது யாருடையதாவது சத்தம் வந்ததா? டச் பண்ணாதீங்க அப்படி என்றால் என்ன அர்த்தம் என்று புலம்புகிறார்.
 
சிநேகன் கோல்டன் டிக்கெட் வைத்திருப்பதால் 100 நாட்கள் வரை நாமினேட் செய்யவே முடியாது என்பதால், மற்ற போட்டியாளர்கள் அவர் மீது எரிச்சலில் உள்ளனர் என்பது மட்டும் நன்றாகவே தெரிகிறது.
 
பிக்பாஸ் வீட்டில் சுஜா வருணிக்கும், சிநேகனுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.