Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சங்கமித்ராவில் இருந்து ஜெயம் ரவி விலகல்?

cauveri manickam| Last Modified வியாழன், 27 ஜூலை 2017 (16:36 IST)
டிக் டிக் டிக்’ படத்தைத் தொடர்ந்து அஹமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க இருப்பதால், ‘சங்கமித்ரா’வில் இருந்து விலகிவிட்டாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. 
சுந்தர்.சி இயக்கத்தில் மிகப்பெரிய வரலாற்றுப் படமாக உருவாக இருப்பதாக சொல்லப்படும் ‘சங்கமித்ரா’ படம், எப்போது தொடங்கும் என யாருக்கும் தெரியவில்லை. ஜெயம் ரவி, ஆர்யா நடிக்கும் இந்தப் படத்தில் இருந்து, நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்த ஸ்ருதி ஹாசன் விலகினார். அதற்கு முன்னரே ஒளிப்பதிவாளரும் விலகினார். வேறொரு ஒளிப்பதிவாளர் கிடைத்துவிட்ட நிலையில், ஹீரோயின் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.

இன்னொரு பக்கம், ‘மெர்சல்’ படத்துக்கு ஏகப்பட்ட செலவுகளை அட்லீ இழுத்து விட்டுவிட்டதால், ‘சங்கமித்ரா’வைத் தொடங்க தயாரிப்பாளரிடம் காசு இல்லையாம். இதனால், எப்போது தொடங்கும் என்றே தெரியாமல் காத்துக் கிடக்கிறது ‘சங்கமித்ரா’. இந்நிலையில், வேறொரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார் ஜெயம் ரவி. தற்போது ‘டிக் டிக் டிக்’ படத்தில் நடித்துவரும் ஜெயம் ரவி, அடுத்ததாக ‘மனிதன்’ படத்தை இயக்கிய ஐ.அஹமதுவுடன் இணைகிறார். அதன்பிறகு ‘சங்கமித்ரா’ தொடங்கினால், அதில் நடிப்பார் என்கிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :