Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஸ்ருதியும், அக்ஷராவும் எப்படிப்பட்ட அக்கா – தங்கை தெரியுமா?

Cauveri Manickam (Sasi)| Last Modified புதன், 12 ஜூலை 2017 (09:58 IST)
‘நானும், அக்‌ஷராவும் சாதாரண அக்கா – தங்கை தான்’ எனத் தெரிவித்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.

 
 
ஸ்ருதி ஹாசன், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்து வருகிறார். அவருடைய தங்கை அக்‌ஷரா ஹாசன்,  உதவி இயக்குனராக இருந்து, பின்னர் நடிகையாகி இருக்கிறார். பொதுவாக, ஒரே ஃபீல்டில் இருப்பவர்கள் என்றால், அவர்களுடைய வேலையைப் பற்றி பேசிக் கொள்வார்கள். ஆனால், ஸ்ருதியும், அக்‌ஷராவும் அப்படியில்லையாம்.
 
“வேலையைப் பற்றிப் பேசுவது போரடிக்கும் விஷயம். சாதாரண அக்கா – தங்கையைப் போலத்தான் நாங்களும். பூனை, குழந்தை ஆகியவற்றின் வேடிக்கையான ஜாலி வீடியோக்களைப் பகிர்ந்து கொள்வது, டான்ஸ் வீடியோக்களைப் பார்ப்பது என்றுதான் இருப்போம்” என்கிறார் ஸ்ருதி.
 
‘வேதாளம்’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தவர் ஸ்ருதி ஹாசன். தற்போது, ‘விவேகம்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் அக்‌ஷரா. “அஜித் சார் மிகச்சிறந்த மனிதர். அவருடன் பணியாற்றியது சந்தோஷம். அந்த வாய்ப்பு அக்‌ஷராவுக்கும் கிடைத்திருப்பது மிகப்பெரிய சந்தோஷம்” என்கிறார் ஸ்ருதி.


இதில் மேலும் படிக்கவும் :