செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 15 மே 2019 (14:05 IST)

இந்தியன் 2 டிராப்பா ? – ஷங்கரின் கடைசி முயற்சி !

இந்தியன் 2 படத்தை தயாரிப்பதில் இருந்து லைகா நிறுவனம் விலகியுள்ளதை அடுத்து ஷங்கர் புதிதாக தயாரிப்பாளர்களை கண்டுபிடிக்க புதிய வழிமுறையை தேர்ந்தெடுத்துள்ள்ளார்.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிக்கும் 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடக்கவில்லை என்றும் அதே நேரத்தில் முதல்கட்ட படப்பிடிப்பிலேயே திட்டமிட்ட பட்ஜெட்டை விட மூன்று மடங்கு செலவானதால் இந்த படத்தினை தொடர லைகா நிறுவனம் விரும்பவில்லை என்றும் தகவல் வந்தது.

350 கோடி பட்ஜெட்டில் இந்த படம் தயாரிக்கப்பட இருந்தது. ஆனால் முதல்கட்ட படப்பிடிப்பின் பாதிகூட முடியாததால் லைகா நிறுவனம் அதிருப்தி தெரிவித்தது. மேலும் படத்தின் நாயகன் கமல் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இறங்கியுள்ளார். இதனால் படத்தின் படப்பிடிப்பும் தாமதமாகிக்கொண்டே இருப்பதால் அதிருப்தி அடைந்த லைகா நிறுவனம் இந்த படத்தில் இருந்து ஒதுங்க முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து ஷங்கர் ஹாலிவுட்டில் பயன்படுத்தப்படும் திரைக்கதை மற்றும் ஷாட்கள் அடங்கிய திரைக்கதையின் முழுவடிவத்தையும் தயார் செய்து அதை சன் பிக்சர்ஸ் மற்றும் ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளார். அந்த புத்தகத்தில் கிராபிக்ஸ் வேலைகள் இடம்பெறும் காட்சிகள் மற்றும் அதற்கான செலவுகள் அடங்கிய முழுவிவரமும் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இரண்டு நிறுவனங்களின் பதிலுக்காக ஷங்கர் காத்திருப்பதாக சொல்லப்படுகிறது.