பிரியா பவானி ஷங்கர் நிச்சயம் வித்யாபாலன் மாதிரி வருவார்!

Last Updated: புதன், 8 மே 2019 (14:51 IST)
பிரியா பவானி ஷங்கர் நிச்சயம் வித்யாபாலன் மாதிரி வருவார் என எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார் .


 
‘ஒரு நாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் எஸ்.ஜே.சூர்யாவை வைத்து ‘மான்ஸ்டர்’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ப்ரியா பவானி ஷங்கர் நாயகியாக நடித்திருக்கிறார். கருணாகரன் நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தை  மாயா, மாநகரம் போன்ற படங்களைத் தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 
 
இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் எலி ஒன்று நடித்துள்ளது. அது சம்பந்தப்பட்டக் காட்சிகளை கிராபிக்ஸில் உருவாக்கியுள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

 
இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய எஸ்.ஜே.சூர்யா  இந்த படத்தில் எனக்கு மிகப் பெரிய ஆசிர்வாதம் இருக்கிறது. எலி என்பது பிள்ளையார் வாகனம். அதிலிருந்தே எனக்கு ஆசிர்வாதம் ஆரம்பித்தது.  மேலும் இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர் அழகான, திறமையான மற்றும் தனித்துவமான நடிகை. இவர் நிச்சயம் வித்யாபாலன் மாதிரி வருவார் என்று கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :