மிட்நைட்டில் நடிகைகளுடன் கும்மாளம் போட்ட ஷாருக்கான் - மிரட்டிய போலீசார்

Last Modified செவ்வாய், 6 நவம்பர் 2018 (12:22 IST)
நள்ளிரவில் மிகுந்த சத்தத்துடன் பார்ட்டி கொண்டாடிய பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை போலீசார் நிறுத்தி கலைந்து செல்லுமாறு வற்புறுத்தியுள்ளனர். 
 
பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் தனது வீட்டின் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் பிறந்த நாள் மற்றும் தீபாவளி விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.
 
இந்த பார்ட்டிக்கு பாலிவுட் நடிகர் - நடிகைகளை விருந்துக்கு அழைத்து இருந்தார். இதில் அமீர்கான், மாதவன், கரண் ஜோஹர், கரீனா கபூர், கத்ரினா கைப், அலியா பட், டாப்சி, ஷில்பா ஷெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விருந்து பயங்கர இசை சத்தத்துடன் அதிகாலை 3 மணிவரை நடந்தது. 
 
இது அக்கம் பக்கத்தினருக்கு பெரும் தொல்லையாக இருந்ததால் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து அங்கு போலீசார் விரைந்து வந்து விருந்தை முடித்து விட்டு அனைவரும் கலைந்து செல்லுமாறு வற்புறுத்தினர். 
 
மேலும், ஓட்டல் நிர்வாகத்தினரையும் எச்சரித்தனர். இதைத்தொடர்ந்து ஷாருக்கான் உடனடியாக அங்கிருந்து வெளியேறினார். மற்ற நடிகர் நடிகைகளும் கிளம்பி சென்றனர். இது இந்தி பட உலகில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது.


இதில் மேலும் படிக்கவும் :