1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 24 நவம்பர் 2017 (14:10 IST)

குடும்பத்தைப் மிகவும் கீழ்தரமாக பேசியதாக அன்புச்செழியன் மீது சசிகுமார் போலீஸில் புகார்

அன்புச்செழியன் எங்கள் குடும்பத்தைப் பற்றி மிகவும் கீழ்தரமாகவும், அநாகரிகமாகவும் பேசியதாக இயக்குநர் சசிகுமார் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.


 
அன்புச்செழியன் மீது இயக்குநர் சசிகுமார் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில்,
 
என் அத்தை மகன் அசோக்குமார் என்னுடன் இணை தயாரிப்பாளராக இருந்துவந்தார். நாங்கள் தற்போது கொடி வீரன் என்ற திரைப்படத்தை தயாரித்து வரும் 30ஆம் தேதி வெளியிடத் தயாராக இருந்தோம். எங்கள் தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியான தாரை தப்பட்டை படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் இல்லை என்பதால் நஷ்டத்தை சந்தித்தோம். 
 
இந்த படத்திற்காக அன்புச்செழியனிடம் பணம் வாங்கி இருந்தோம். அதற்கான வட்டியையும் செலுத்தி வருகிறோம். அன்புச்செழியன், அசல் மற்றும் வட்டிக்கு வட்டி போட்டு ஒரு பெரும் தொகையினை திரும்ப கொடுக்க வேண்டும் இல்லை என்றால் கொடி வீரன் படத்தை வெளியிட விட மாட்டேன் என நெருக்கடி கொடுத்து வந்தார்.
 
நான் படவேலையில் பிஸியாக இருந்ததால் இணை தயாரிப்பாளர் என்ற முறையில் அசோக் குமார் இந்த பிரச்சனையை கையாண்டு வந்தார். அன்புச்செழியன் என்னைப்பற்றியும், எங்கள் குடும்பத்தைப் பற்றியும் மிகவும் கீழ்தரமாக பேசுவதாக அசோக் குமார் வருத்தப்பட்டார். நான் அதற்கு வருத்தப்பட வேண்டாம் என்று கூறினேன். இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
 
கந்துவட்டி கேட்டு மிரட்டியதோடு அசோக்குமாரை தற்கொலைக்குத் தூண்டிய அன்புச்செழியன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சசிகுமார் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.