அசோக்குமார் தான் போயிட்டார், சசிகுமாரையாவது காப்பாற்றுங்கள்: வைகோ

sivalingam| Last Modified வியாழன், 23 நவம்பர் 2017 (21:52 IST)
நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமாரின் மறைவிற்கு ஒட்டுமொத்த திரையுலகமே இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் அவருக்கு அரசியல்வாதிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று ஒரு நிகழ்ச்சியில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, 'அசோக்குமாரைத்தான் பாதுகாக்க முடியவில்லை, சசிகுமாரையாவது காப்பாற்றுங்கள் என்று காவல்துறையினர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, 'சினிமா துறையைச் சேர்ந்த அசோக்குமார் கந்து வட்டி கொடுமையில் தற்கொலை செய்துகொண்டது மிகவும் வருத்தத்துக்குரியது. இயக்குனர் சசிகுமாரையாவது காவல்துறை பாதுகாக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பாதுகாப்பளிக்காமல் அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்

ஆனால் திரையுலகில் சிலரும், அரசியல்வாதிகளில் சிலரும் அன்புச்செழியனை பாதுகாக்கும் நடவடிக்கையில் ரகசியமாக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :