1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : சனி, 17 பிப்ரவரி 2018 (20:22 IST)

ஜீவா படத்துக்கு இசையமைக்கிறார் சந்தோஷ் நாராயணன்

ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘ஜிப்ஸி’ படத்துக்கு இசையமைக்கிறார் சந்தோஷ் நாராயணன். 

 
‘குக்கூ’ மற்றும் ‘ஜோக்கர்’ படங்களைத் தொடர்ந்து ராஜு முருகன் இயக்கவிருக்கும் படம் ‘ஜிப்ஸி’. இந்தப் படத்தில், ஜீவா ஹீரோவாக நடிக்க உள்ளார். தற்போது டான் சாண்டி இயக்கத்தில் ‘கொரில்லா’ படத்தில் நடித்துவரும் ஜீவா, அதன்பிறகு இந்தப் படத்தில் நடிக்கிறார்.
 
ஒலிம்பியா பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ராஜு முருகன் இதற்கு முன்னர் இயக்கிய இரண்டு படங்களுக்கும் இவர்தான் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
‘மாநகரம்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த எஸ்.கே.செல்வகுமார், இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஹீரோயின் உள்ளிட்ட பிற நடிகர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. மே மாதம் முதல் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது என்கிறார்கள்.