வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (20:37 IST)

ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘ஜிப்ஸி’

ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் படத்திற்கு ‘ஜிப்ஸி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.



‘குக்கூ’ மற்றும் ‘ஜோக்கர்’ படங்களை இயக்கியவர் ராஜு முருகன். தன் சொந்த அண்ணனான சரவணன் ராஜேந்திரன் படத்திற்கு வசனம் எழுதியுள்ள ராஜு முருகன், தெலுங்கின் சூப்பர் ஹிட் படமான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘வர்மா’ படத்திற்கும் வசனம் எழுதியுள்ளார். ‘வர்மா’ படத்தை பாலா இயக்க, விக்ரம் மகன் த்ருவ் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்நிலையில், தன்னுடைய மூன்றாவது படத்துக்கான வேலைகளைத் தொடங்கிவிட்டார் ராஜு முருகன். ஜீவா, இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ‘ஜிப்ஸி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஹீரோயின் உள்ளிட்ட மற்றவர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. மே மாதம் முதல் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.