ஒத்திவைக்கப்பட்டது ஆர்.ஆர்.ஆர் ட்ரெய்லர் ரிலீஸ்!
ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.
பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர்
இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் இதன் பாடல்கள் அனைத்து மொழிகளிலும் வெளியாகி ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் டிசம்பர் 3 அன்று வெளியாகும் என ராஜமௌலி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது எதிர்பாராத சில சூழல் காரணமாக ஆர்.ஆர்.ஆர் பட ட்ரெய்லர் டிசம்பர் 3 அன்று வெளியாகாது என்றும், ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.