1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 30 நவம்பர் 2021 (20:48 IST)

பெற்றோர் செய்த செயலால் சிறுமி தற்கொலை!

தேனி  மாவட்டத்தில் பெற்றோர் தினமும் சண்டையிட்டு வந்ததால்  சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. 
 
தேனி மாவட்டம் போட்டி மின்வாரிய அலுவலகத்திக்கு அருகே உள்ள குடியிருப்பில் வசித்து வந்தவர் இருளாண்டி. இவருக்கும் இவரது மனைவி விஜயாவுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த   மக்களுக்கு திருமணமாகிவிட்ட நிலை இரண்டாவது மகள் அங்குள்ள தனியார் பள்ளியில் ௯ ஆம் வகுப்பு படித்து வந்தார்.  
 
இந்நிலையில் தினமும் அவரது பெற்றோர் சண்டையிட்டு வந்ததால் மனமுடைந்த சிறுமி  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுமியின் பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.