வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By papiksha joseph
Last Modified: செவ்வாய், 30 நவம்பர் 2021 (19:11 IST)

பிரம்மாண்டத்திற்கு பெருமை சேர்க்கும் மரைக்காயர் - புதிய ட்ரைலர் இதோ!

சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில்  மரைக்காயர் அரபிக் கடலிண்டே சிம்ஹம் என்ற படத்தின் புதிய ட்ரைலர்  வெளியாகியுள்ளது.
 
மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் கதாநாயகனாக  நடித்துவரும்  மரைக்கார் அர்பிக் கடலிண்டே சிம்ஹம் என்றும் தமிழில் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், முகேஷ் ,நெடுமுடி வேனு, அசோக் செல்வன், பைசால் , சித்திக் . சுரேஷ் கிருஷ்ணா மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.
வருகிற டிசம்பர் 2ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் கடைசிகட்ட ப்ரோமோஷன் வேலைகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அதன்படி சற்றுமுன் இப்படத்தின் புதிய ட்ரைலர் வீடியோ யூடியூபில் வெளியிட்டுள்ளனர் படக்குழு. இதோ அந்த வீடியோ... இப்படத்தை தமிழில் வி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் திரு.கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் வெளியிடுவது கூடுதல் தகவல்...