Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விரைவில் வெளியாகிறது ஸ்ருதி ஹாசன் திருமண அறிவிப்பு

Last Modified வியாழன், 7 டிசம்பர் 2017 (11:06 IST)
ஸ்ருதி ஹாசனின் திருமணம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்கிறார்கள்.
நடிகையான ஸ்ருதி ஹாசன், இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், பின்னணிப் பாடகியாகவும் இருந்து வருகிறார். ஆனால்,  எதிலுமே அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதுதான் சோகம். தற்போது கமல்ஹாசன் இயக்க இருக்கும் ‘சபாஷ் நாயுடு’  என்ற ஒரு படத்தை மட்டுமே கையில் வைத்துள்ள ஸ்ருதி, திருமணத்துக்குத் தயாராகி விட்டார் என்கிறார்கள்.
 
லண்டனைச் சேர்ந்த நடிகர் மைக்கேல் கார்செல்லைக் கரம்பிடிக்க இருக்கிறார் ஸ்ருதி. சமீபத்தில் அம்மா சரிகாவிடம் காதலனை அறிமுகப்படுத்தி வைத்தார் ஸ்ருதி. நேற்று நடைபெற்ற நடிகர் ஆதவ் கண்ணதாசன் திருமணத்தில்,  கமல்ஹாசனோடு ஸ்ருதி மற்றும் மைக்கேல் கார்செல்லும் வந்திருந்தனர்.
 
ஸ்ருதி பட்டுச்சேலையிலும், மைக்கேல் பட்டு வேட்டி - சட்டையிலும் மணமக்கள் போலவே வந்திருந்தனர். கமல், சரிகா இருவருமே இவர்கள் திருமணத்துக்கு சம்மதம் சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. எனவே, திருமணம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்கிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :