திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: செவ்வாய், 31 அக்டோபர் 2017 (12:25 IST)

அமலா பால் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு - கிரண்பேடி

அமலா பால் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

 



கடந்த ஆகஸ்ட் மாதம் புதிதாக பென்ஸ் கார் வாங்கிய அமலா பால், அதை கேரளாவில் பதிவு செய்தால் 20 லட்சம் வரியாகக் கட்ட வேண்டும் என்பதால், இரண்டு லட்சம் மட்டும் செலவு செய்து புதுச்சேரியில் பதிவு செய்துள்ளார். புதுச்சேரியில் வசிப்பவர்கள் மட்டுமே அங்கு பதிவுசெய்ய முடியும் என்பதால், இன்னொருவர் பெயரில் போலி முகவரி கொடுத்து பதிவு செய்துள்ளார் அமலா பால். இந்த விஷயம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இதுகுறித்து விசாரித்து வழக்குப்பதிவு செய்யுமாறு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். நேற்று மாலை ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் இதனைத் தெரிவித்தார். அத்துடன், இதேபோல் வேறு யாரெல்லாம் வரி ஏய்ப்பு செய்துள்ளனர் என்று விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.