ஒருநாள் முதல்வர் போல், ஒருநாள் கவர்னர்: கிரண்பேடியின் குழந்தை உள்ளம்

sivalingam| Last Updated: திங்கள், 30 அக்டோபர் 2017 (15:38 IST)
புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாகவே முதல்வர் நாராயணசாமிக்கும் கவர்னர் கிரண்பேடிக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தாலும் கிரண்பேடிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதை யாராலும் மறுக்க முடியாது

கவர்னரை சாதாரண குடிமக்களும் எளிதில் பார்க்க முடியும் என்ற நிலையை உருவாக்கிய முதல் கவர்னர் கிரண்பேடிதான். அவரது அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் எந்த நேரத்தில் பொதுமக்கள் வந்து தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்று அவர் அறிவித்துள்ளதால் அவரது இல்லமும், அலுவலகமும் எந்த நேரமும் பிசியாக இருக்கும்
 
அதுமட்டுமின்றி குழந்தைகளின் மீது மிகுந்த அன்பு கொண்டவர் கிரண்பேடி. தன்னை பார்க்க வரும் குழந்தைகளை தன்னுடைய இருக்கையில் அமர வைத்து ஷங்கரின் படத்தில் வரும் ஒருநாள் முதல்வர் போல, ஒரு நாள் கவர்னர், ஒருநிமிட கவர்னர் போன்ற காட்சிகளை உருவாக்கி வருகிறார். இதுகுறித்து அவர் தனது சமூகவலைத்தளத்தில் கூறியபோது, “யாருக்குத் தெரியும்? நாளை இதே புதுச்சேரி மாநிலத்துக்கு இவர்களே கவர்னராக வரலாம். அவர்களை ஊக்கப்படுத்தவே என் இருக்கையில் அமர வைத்தேன்” என்று கூறியிருக்கிறார்.இதில் மேலும் படிக்கவும் :