1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (14:49 IST)

படவாய்ப்பிற்காக கவர்ச்சியை குறைக்க முடிவு செய்த பிரபல நடிகை

நடிகைகள் படவாய்ப்பிற்காக கவர்ச்சியில் இறங்க முடிவெடுக்கும் நிலையில் தெலுங்கு முன்னணி நடிகை ரெஜினா கிளாமரை குறைக்க முடிவு செய்துள்ளாரம்.


 

 
தமிழகத்தை பூர்விகமாக கொண்ட ரெஜினா கஸ்ஸாண்ட்ரா தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழில் அவ்வப்போது படம் நடித்து வந்தாலும் தெலுங்கில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். 
 
சமீபத்தில் ரெஜினா நடித்து வெளியான தெலுங்கு படம் போதிய வரவேற்பை பெறவில்லை. படத்தில் ரெஜினா சற்று தூக்கலான கவர்ச்சியில் நடித்திருந்தாராம். அந்த படம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானதாம். இதனால் ரெஜினா தற்போது ஓவர் கிளாமர் காட்டி பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்துள்ளாராம். 
 
நடிகைகள் பெரும்பாலும் தங்கள் மார்க்கெட்டை தக்கவைத்துக்கொள்ளவும், படவாய்ப்பிற்காகவும் கவர்ச்சியில் இறங்குவது வழக்கம். ஆனால் ரெஜினாவுக்கு கவர்ச்சியே ஆப்பு வைத்துள்ளது.