‘காலா’ டீஸருக்காக ராப் பாடகருக்கு நன்றி சொன்ன இசையமைப்பாளர்

CM| Last Updated: வியாழன், 1 மார்ச் 2018 (22:37 IST)
‘காலா’ டீஸருக்காக ராப் பாடகர் யோகி பி-க்கு நன்றி கூறியுள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். 
பா.இரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காலா’. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டீஸர் இன்று ரிலீஸாவதாக இருந்தது. ஆனால், ஜெயேந்திரரின் மறைவால் நாளை அது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், ராப் பாடகர் யோகி பி-க்கு நன்றி சொல்லி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் இந்தப் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். ‘காலா’ டீஸருக்காக மிகச்சிறந்த பங்களிப்பைச் செய்ததற்காக நன்றி தெரிவித்துள்ள சந்தோஷ் நாராயணன், ‘பிரித்து மேய்ந்து விட்டீர்கள் ஐயா’ என்றும்  குறிப்பிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :