வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 10 ஏப்ரல் 2019 (14:04 IST)

ரேப் சீன நேச்சுரலா எடுக்க முடியுமா? மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய ராதாரவி!!!

சர்ச்சை கருத்துக்களை கூறுவதில் பெயர்போன ராதாரவி தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையாக கருத்தைக் கூறி சிக்கலில் சிக்கியுள்ளார்.
எப்பொழுதும் சர்ச்சையான கருத்தை கூறி வரும் ராதாரவி சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நயன்தாராவை பற்றி அவதூறாக பேசி சிக்கலில் சிக்கினார். பின் தான் பேசியது தவறாக இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள் என கூறினார்.
 
இந்நிலையில் பட விழா ஒன்றில் பங்கேற்ற ராதாரவி, சில இயக்குனர்கள் படத்த நேச்சுரலா எடுக்குறன்னு சொல்றாங்க அப்படி சொல்றவுங்கனால ரேப் சீன நேச்சுரலா எடுக்க முடியுமா என கேள்வி எழுப்பினார். சும்மா நேச்சுரலா எடுக்கிறேன்ன்னு சொல்லிட்டு திரியாதீங்கன்னு கூறினார்.
 
மேற்கு தொடர்ச்சி மலை இயக்குனர் லெனின் பாரதி, ஏற்கனவே ராதாரவியை விமர்சனம் செய்திருந்த நிலையில், ராதாரவி அவருக்கு பதிலடி கொடுக்கவே இப்படி பேசியதாக கூறப்படுகிறது. ராதாரவி இப்படி பேசியது பல இயக்குனர்கள கொந்தளிப்படைய செய்துள்ளனர்.