வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 10 ஏப்ரல் 2019 (11:39 IST)

சின்னம்மா செத்துட்டாங்க.. பிரச்சாரத்தில் பரபரப்பைக் கிளிப்பிய ரஞ்சித்....

அமமுக வேட்பாளருக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்ட நடிகர் ரஞ்சித் சசிகலா இறந்துவிட்டதாக கூறியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டம்னற இடைத்தேர்தல் நெருங்க இன்னும் சில நாட்களே உள்ளது. பல்வேறு கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
 
பரப்புரையில் ஈடுபடும் அமைச்சர்களும், வேட்பாளர்களும், பேச்சாளர்களும் அவ்வப்போது ஏடாகுடமாக பேசி சர்ச்சையில் சிக்கி வருகின்றனர்.
 
அந்த வகையில் சமீபத்தில் பாககவில் இருந்து விலகி அமமுகவில் இணைந்த நடிகர் ரஞ்சித், தஞ்சாவூரில் அமமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் முருகேசனை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் அமமுக பொதுச்செயலாளர் சசிகலா இறந்துவிட்டதாக தெரியாமல் கூறினார். உடனடியாக சுதாரித்துக்கொண்டு வேறு டாப்பிக்கை பேச ஆரம்பித்துவிட்டார். ரஞ்சித் இப்படி பேசியதால் கூட்டத்தில் சற்று நேரம் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டது.