திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 12 டிசம்பர் 2017 (15:59 IST)

நிவின் பாலியின் ரிச்சி படத்துக்கு மக்கள் ரெஸ்பான்ஸ் இதுதான்...

நிவின் பாலியின் முதல் தமிழ்ப் படமான ‘ரிச்சி’க்கு, மக்கள் ஆவரேஜ் வரவேற்பு கொடுத்துள்ளனர்.

 
‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நிவின் பாலி. ஆனால், அது மலையாளப் படத்தின் டப்பிங். மலையாளத்தில் நிவின் பாலி நடித்த ‘பிரேமம்’ படமும், தமிழ் ரசிகர்களிடம் நிவின் பாலியைக் கொண்டு சேர்த்தது. சென்னையில் மட்டும் 225 நாட்களுக்கு ஓடியது ‘பிரேமம்’.
 
எனவே, தன்னுடைய தமிழ் ரசிகர்களுக்காக நிவின் பாலி நேரடியாக நடித்த முதல் தமிழ்ப் படம்தான் ‘ரிச்சி’. கெளதம் ராமச்சந்திரன் இயக்கிய இந்தப் படம், கன்னடத்தில் வெளியான ‘உளிடவரு கண்டந்தே’ படத்தின் ரீமேக். ஷ்ரத்தா ஸ்ரீநாத், நட்டி, லட்சுமிப்பிரியா சந்திரமெளலி ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
 
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு இடையில் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான இந்தப் படம், ரொம்ப சுமாராகவே இருக்கிறது. எதிர்பார்ப்பில் வார இறுதியில் பலர் முன்கூட்டியே புக் செய்து வைத்திருந்ததால், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என மூன்று நாட்களும் சேர்த்து, சென்னையில் ஓடிய 165 காட்சிகளில் 77 லட்ச ரூபாய் வசூல் செய்துள்ளது.